திருமங்கலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மைத்துனர் அடித்துக்கொலை

திருமங்கலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கொலை
கொலை
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம்(வயது 49). விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆதிலட்சுமியின் பெரியப்பா மகன் தங்கப்பாண்டி(45). இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணி அளவில் தங்கப்பாண்டி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது இவருடைய மைத்துனர் ஜெயராம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி அருகில் கிடந்த உருட்டு கட்டையால் ஜெயராமை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த தகராறின்போது தங்கப்பாண்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com