திருமங்கலம் அருகே விபத்து: பெண் பலி

திருமங்கலம் அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண், லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம் அருகே விபத்து: பெண் பலி
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ராமேசுவரி (வயது 32). இவர்கள் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காட்டு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் புறப்பட்டனர். குறுக்குச் சாலையில் இருந்து 4 வழிச்சாலையில் மொபட் ஏறிய போது அந்த வழியே வத்ராயிருப்பைச் சேர்ந்த மகாலிங்கம் ஓட்டிவந்த டேங்கர் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட்டில் உரசியது.

இதில் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து பிரபுவும், ராமேசுவரியும் சாலையில் விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரபுவுக்கு லேசான காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com