திருமங்கலம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை

திருமங்கலம் அருகே பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள டி.அரசப்பட்டியை சேர்ந்தவர் மலர். இவரது மகள் முனீஸ்வரி (வயது 24). இவரது கணவர் செல்வராஜ். இவர்களுக்கு 2 வயதில் ஈஸ்வரி என்ற மகள் இருந்தாள்.

சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முனீஸ்வரி குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற முனீஸ்வரி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் பல இடங்களில் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இன்று காலை அரசப்பட்டி கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் முனீஸ்வரி தனது மகளுடன் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் முனீஸ்வரி மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com