திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள ஏமாப்பேர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்தாஸ் (வயது 50) விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். தற்போது நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற் பயிரை நாசம்செய்து வந்தன.

இதனைதொடர்ந்து கோகுல் தாஸ் தனது வயலைசுற்றி மின்சார வேலிஅமைத்திருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த விவசாயி பிரபு (29) இன்று காலை வயல்வெளிக்கு சென்றார்.

அப்போது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தெரியாமல் மிதித்துவிட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று வயலில் பிணமாக கடந்த பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com