பெட்டிக்கடைகளில் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

திருக்கோவிலூர் அருகே பெட்டிக்கடைகளில் மதுபாட்டில் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள பழையவேங்கூர் கிராமத்தில் பெட்டிக்கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நரசன் மனைவி கோவிந்தம்மாள்(வயது 44), அருணாசலம் மனைவி பூமாதேவி (62) ஆகியோர் தங்கள் பெட்டிக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 4 மதுபாட்டில்களையும் பறிமுதல்செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com