திருக்குறுங்குடியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

திருக்குறுங்குடியில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நெல்லை:

திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜாபுதூரைச் சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவரது மகன் சக்திகண்ணன் (வயது 17). படிப்பு வரவில்லை என்று 11-ம் வகுப்பு படிக்காமல் இடையில் நின்று விட்டான்.

இதனால் அவனது பெற்றோர், சக்திகண்ணனை வேலைக்கு போகச் சொன்னார்கள். ஆனால் சக்திகண்ணன் வேலைக்கு செல்லாமல், சும்மா இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவனை பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த சக்திகண்ணன், நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com