திருக்குறுங்குடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளி கைது

திருக்குறுங்குடி அருகே சாலையில் ரகளை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தளவாய்புரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு வன்னியன்குடியிருப்பை சேர்ந்த தொழிலாளி நாராயணன் (வயது 45) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com