திருக்குறுங்குடி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு

திருக்குறுங்குடி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

வள்ளியூர்:

திருக்குறுங்குடி தென்கரையை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்ராஜ் (வயது 30). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர், பல்வேறு கடைகளுக்கு சென்று ஆர்டர் எடுத்து கொண்டு, வள்ளியூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் வேல்ராஜை வழிமறித்து ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com