திருக்குறுங்குடியில் என்ஜினீயர் காரில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு

திருக்குறுங்குடியில் என்ஜினீயர் காரில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு
நகை திருட்டு
Published on

களக்காடு:

மதுரையை சேர்ந்தவர் கார்த்திகேசன் மகன் ராஜசேகர் (வயது 31). இவர் அங்கு சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி சன்னதி தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்திருந்தார்.

அதன் பின்னர் தனது காரில் ஊருக்கு திரும்பினார். காரில் அவரது மனைவியின் 64 கிராம் எடையுள்ள தங்க நகைகள் (வளையல்கள்-2, செயின் -1, மோதிரம்-2, 1 ஜோடி கம்மல் ஆகியவற்றை) ஒரு பர்சில் வைத்து கைப்பையில் வைத்திருந்தனர்.

நம்பிதலைவன்பட்டயத்தில் காரை நிறுத்திய அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு நாய் குட்டியை பார்க்க சென்றனர். பின்னர் காரில் ஏறி மதுரைக்கு சென்று விட்டனர். அங்கு சென்று கைப்பையை பார்த்த போது அதில் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பர்ஸ் மாயமாகி இருந்தது.

திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். நம்பி தலைவன்பட்டயத்தில் காரை நிறுத்திய போது தான் தங்க நகைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று கருதிய அவர்கள் இது குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com