திருக்கனூர் அருகே வாலிபர் தற்கொலை

திருக்கனூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே எல்.ஆர். பாளையம் அம்மன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39) இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே வெங்கடேசன் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் வங்கி கடன் வாங்கி தருவதாக சிலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வேலை வாங்கி தருவதாகவும் ஒருவரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை வெங்கடேசன் மற்றொருவரிடம் கொடுத்திருந்தார். ஆனால், அந்த நபர் வேலை வாங்கி தரவுமில்லை. மேலும் வங்கி கடனும் பெற்று தரவில்லை.

இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வெங்கடேசனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com