திருச்சி அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
Published on

துறையூர்:

திருச்சியில் இருந்து துறையூரை நோக்கி பால் பாக் கெட்டுகளை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை மண்ணச்சநல்லூர் அடுத்த அத்தாணி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 30) என்பவர் ஓட்டினார். பெரமங்கலத்தை சேர்ந்த கதிரேசன் (22) என்பவர் கிளீனராக இருந்தார்.

வேன் திருச்சி-துறையூர் சாலையில் கரட்டாம்பட்டி அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் புலிவலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் குருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புலி வலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

துறையூரை அடுத்த நரசிங்க புரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வீரம்மாள் (49) செங்கல் ஏற்றி செல்லும் லாரியில் கூலிதொழிலாளி. நேற்று செல்லிபாளையம் என்ற இடத்தில் செங்கல் இறக்க சென்றார்.

பின்னர் ஒரு இடத்தில் செங்கல் இறக்கப்பட்டது. அப்போது லாரியை சிறிது தூரம் நகர்த்த வேண்டி இருந்தது. லாரியில் டிரைவர் செந்தில் இல்லாததால் ஒட்டம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனக்கு லாரி ஓட்ட தெரியும் என்று கூறி லாரியை ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி வீரம்மாள் மீது மோதியது. இதில் வீரம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com