திருச்செந்தூரில் முதியவர் அடித்து கொலை

திருச்செந்தூரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் நாழிகிணறு கார் பார்க்கிங் அருகே இன்று ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த நபர் நெல்லை வண்ணர்பேட்டை பகுதியை சேர்ந்த பேராட்சி (வயது55) என்பது தெரியவந்தது. சில நாட்களாக அவர் கோவில் வளாகத்தில் தங்கி இருந்துள்ளார்.

அவருடன் தங்கி இருந்த குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் தான் பேராட்சியை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com