திருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பலி

திருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.
திருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பலி
Published on

திருபுவனை:

கலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையே அய்யனார் சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட போது கணவரை மிரட்ட பழனியம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) தின்றார்.

இதில் மயங்கி விழுந்த பழனியம்மாளை அய்யனார் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பழனியம்மாளுக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பழனியம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து பழனியம்மாளின் அண்ணன் ராஜ வேலு கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு வசந்தராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com