திருபுவனை அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி

திருபுவனையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்து போனார்கள். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருபுவனை அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே தமிழக பகுதியான மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜெயவர்தன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் விஜய் (23) திருமுருகன் (23), நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுவை சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை எதிரே வந்த போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக் கிள் மீது மோதியது.

இதில், உடல் நசுங்கி ஜெய வர்தன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். படு காயம் அடைந்த விஜய் மற்றும் திருமுருகன் ஆகி யோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் விஜய் இறந்து போனார்.

திருமுருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com