தற்கொலை
தற்கொலை

திருபுவனையில் பேக்கரி கடைக்காரர் தற்கொலை

திருபுவனையில் பேக்கரி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 70). அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார். அது முதல் ரங்கநாதன் சோகமாக இருந்துவந்தார். மேலும் திருமண வயது வந்த தனது மகன்களுக்கு வரன் அமையாததால் ரங்கநாதன் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு ரங்கநாதன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com