லாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: 13 சீனர்கள் பலி

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் சீனாவை சேர்ந்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்
விபத்துக்குள்ளான பஸ்
Published on

வியன்டியன்:

லாவோஸ் நாடு சீனாவின் எல்லையோரம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லுவாங் பிரபாங் நகரில் இருந்து தலைநகர் வியன்டியன் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் லாவோஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த சீனாவை சேர்ந்த 43 பேர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்பட மொத்தம் 46 பேர் பயணித்தனர். லுவாங் பிரபாங் நகரின் மலைப்பாங்கான பகுதியை பஸ் கடந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 31 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மலைப்பாங்கான பகுதியில் பயணித்தபோது பிரேக் சரிவர செயல்படாததே இந்த விபத்து நிகழ காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com