3-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #INDvsSA #ThirdODI
3-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
Published on

கேப் டவுன்:

தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளில் விளையாடும் வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரகானே, எம்.எஸ். டோனி (விக்கெட்கீப்பர்), கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா

தென்ஆப்பிரிக்கா: ஹாசிம் அம்லா, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட்கீப்பர்), ஜீன்-பால் டுமினி, டேவிட் மில்லர், கயா சோண்டோ, கிறிஸ் மோரிஸ், ஆண்டிஸ் பெஹலுக்வாயோ, ககிசோ ரபாடா, லுங்குசானி நிகிடி, இம்ரான் தாகிர். #INDvsSA #ThirdODI

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com