கர்நாடக மந்திரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை: பா.ஜ.க.வினர் நம்பிக்கை இழந்துவிட்டனர்- அகமதுபடேல் குற்றச்சாட்டு

கர்நாடக மந்திரியின் வீடு மற்றும் சொகுசு விடுதியில் நடந்த வருமான வரித்துறை சோதனை, பா.ஜ.க.வினர் நம்பிக்கை இழந்துவிட்டதையே காட்டுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மந்திரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை: பா.ஜ.க.வினர் நம்பிக்கை இழந்துவிட்டனர்- அகமதுபடேல் குற்றச்சாட்டு
Published on

கர்நாடக மாநிலத்தில் எரிசக்தி துறை மந்திரியாக இருப்பவர் சிவகுமார். இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை ந்டத்தினர்.

மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில், ’’குஜராத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அமைப்புகளையும் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com