கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்

கொல்கத்தா சர்வதேச பட விழாவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக வந்த தகவல்களை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார்.
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
Published on

கொல்கத்தாவில் கடந்த 10-ந் தேதி, சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மேற்கு வங்காள அரசின் அழைப்பின் பேரில், அதில் இந்திப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார். மறுநாள், அவர் மும்பை திரும்புவதற்காக,மாநில அரசின் ஏற்பாட்டில் ஒரு டிராவல்ஸ் நிறுவன காரில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நடுவழியில், அந்த காரின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியது. நல்லவேளையாக அமிதாப் பச்சன் காயமின்றி உயிர் தப்பினார். பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மூத்த மந்திரியின் காரில் ஏறி அவர் விமான நிலையத்துக்கு சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com