ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை - நடராஜன்

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்று புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை - நடராஜன்
Published on

சென்னை:

ஜெயலலிதா மறைவால் தமிழத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் செயல்பட முடியாமல் உள்ளது தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் உள்ளதாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்று புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், “நேருக்கு பிறகு பெரிய வெற்றிடம் வரும் என்று கூறினார். ஆனால் லால் பகதூர் சாஸ்திரி என்ற தலைவர் வந்தார். இந்திரா காந்திக்கு பிறகு யாரும் இல்லை என்று பேசப்பட்டது. எங்கிருந்தோ ராஜீவ் காந்தி வந்து ஆட்சி செய்தார். 

அதேபோல், தமிழகத்திலும் காமராஜருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, எம்.ஜி.ஆர்-க்கு பிறகு வெற்றிடம் ஏற்படும் என்று பேசப்பட்டது. அடுத்தடுத்த தலைவர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். புதிய தலைவர்கள் இனி பிறக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள். அது மக்களுக்கு தெரியும்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com