தேனி அருகே சொத்து பிரச்சினையில் தாயை தாக்கிய மகன்

தேனி அருகே சொத்து பிரச்சினையில் மகன் தாயை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே சொத்து பிரச்சினையில் தாயை தாக்கிய மகன்
Published on

தேனி:

தேனி அருகே சின்னமனூர், ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னத்தாய் (வயது 63). கன்னிமார் கோவில் பகுதியில் உள்ள தோட்டத்தை சின்னத்தாய் மற்றும் அவரது பேரன் பெயருக்கு பட்டா எழுதப்பட்டது.

ஆனால் அவரது மகன் விஜயன் சொத்து முழுவதையும் தனக்கு தர வேண்டும் என பிரச்சினை செய்து வந்தார். சம்பவத்தன்று விஜயன் தாய் என்று கூட பாராமல் சின்னத்தாயை தாக்கி காயம் ஏற்படுத்தினார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com