தேனி அருகே பெரியாற்றில் மணல் கடத்திய கும்பல்

தேனி அருகே பெரியாற்றில் மணல் கடத்திய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே பெரியாற்றில் மணல் கடத்திய கும்பல்
Published on

தேனி:

தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து அபராதம் விதித்தபோதும் இது தொடர்ந்து வருகிறது. அரசு அனுமதியின்றி நீர் நிலைகள் மற்றும் பெரியாற்றில் அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அருகே ஜங்கால்பட்டி, லெட்சுமிபுரம் பகுதியில் வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது பெரியாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டு 4 மாட்டு வண்டிகள் வந்தது. அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. எனவே இது தொடர்பாக லெட்சுமிபுரததைச் சேர்ந்த பரமன், இந்திரஜித், கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com