தேனி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயிக்கு மிரட்டல்

தேனி அருகே ஒத்தி பணத்தை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் விவசாயியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி அருகே நிலப்பிரச்சினையில் விவசாயிக்கு மிரட்டல்
Published on

தேனி:

போடி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாறன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 லட்சத்துக்கு குத்தகைக்கு வாங்கி விவசாயம் பார்த்து வந்தார்.

அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் தனது நிலத்தை மீண்டும் தருமாறு சுகுமாறன் கேட்டு வந்தார். அதற்கு கவாஸ்கர் பணத்தை கொடுத்து விட்டு நிலத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகுமாறன் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த அகத்தி செடியை சேதப்படுத்தினார். இதை தட்டிக் கேட்ட கவாஸ்கரையும தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுகுமாறன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com