

தேனி:
தேனி அரண்மனைப்புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பஞ்சவர்ணம்(வயது36). இவருக்கும் கிழக்குத்தெருவை சேர்ந்த உதயசூரியன்(50) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டில் இருந்த போது அங்குவந்த உதயசூரியன், அவரது மனைவி கோகிலா(46), மகன் குணசீலன் ஆகியோர் பஞ்சவர்ணத்தை ஆபாசமாக பேசி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.