தேனி அருகே காதல் மனைவியை அடித்து துரத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு

தேனி அருகே காதல் மனைவியை அடித்து துரத்திய கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அருகே காதல் மனைவியை அடித்து துரத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on

தேனி:

தேனி அருகே ஆண்டிப்பட்டி மணியக் காரர்தெருவை சேர்ந்தவர் சிவஆண்டவர் குமார். இவரது மனைவி சஞ்சீவிஈஸ்வரி(வயது35). இவரும் காதல் திருமணம் செய்தவர்கள். நாளடைவில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்து வைத்தபோதும் பிரச்சினை வளர்ந்து கொண்டே இருந்தது.

சம்பவத்தன்று சிவாஆண்டவகுமார் தனது நண்பர்கள் யுவராஜ், வீரமணி, கோட்டை ஆகியோருடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு துரத்தினார்.

மேலும் மறுபடியும் வந்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சீவி ஈஸ்வரி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com