தேனி அருகே பெண் தர மறுத்ததால் தகராறு செய்த 3 பேர் கைது

தேனி அருகே பெண் தர மறுத்ததால் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தேனி:

போடி புதூர் போயன்துரை ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது உறவினர் பாண்டியன் (வயது51). சம்பவத்தன்று பாண்டியன் தனது மகன் மாரிமுத்துவுக்கு அழகம்மாளின் மகளை பெண் கேட்டுள்ளார்.

அவர் தர மறுக்கவே பாண்டியனும், மாரிமுத்துவும் சேர்ந்து அழகம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

தேனி வீரபாண்டி தெற்கு தெருவை சேர்ந்த ராம்குமார் மனைவி ரோஜா (25). சம்பவத்தன்று இவர் மீனாட்சிபுரம் சாக்கலூத்து மெட்டு பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் நடராஜபிரபு (29) அவரை வழிமறித்து உனது தங்கை நந்தினியை நான் திருமணம் செய்ய வேண்டும். இதற்கு இடையூறாக இருந்தால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் ரோஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடராஜ பிரபுவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com