குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 18-ஆக உயர்ந்தது

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. #TheniFire #KuranganiForestFire
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழப்பு 18-ஆக உயர்ந்தது
Published on

கோவை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்தனர். இதையடுத்து, கடந்த 15-ம் மற்றும் 16-ம் தேதிகளில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், சென்னையைச் சேர்ந்த அணுவித்யா, திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம், குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். #TheniFire #KuranganiForestFire #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com