தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் 6,365 பேர் நீக்கம்

தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள்6,365 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் 6,365 பேர் நீக்கம்
Published on

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள போலி வாக்காளர்கள், இறந்து போனவர்கள், வீடு மாறி சென்றவர்கள் பெயர்களை கண்டறிந்து நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி முதல் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 20 நாட்களாக நடந்த இந்த அதிரடி ஆய்வில் ஏராளமான போலி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 4.79 லட்சம் போலி வாக்காளர்கள் பெயர்களை அதிகாரிகள் நீக்கி உள்ளனர்.

அதன்படி தேனி மாவட்டத்தில் இறந்தவர்கள் 982 பேரும், இடம் மாறியவர்கள் 186 பேரும், ஆக மொத்தம் 1168 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இறந்தவர்கள் 4475 பேரும், இடம் மாறியவர்கள் 722 பேரும் ஆக மொத்தம் 5197 பேரின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com