பல்லடத்தில் ஓட்டல் ஊழியரிடம் பணம் பறிப்பு- 6 பேர் கும்பல் கைது

பல்லடத்தில் கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் ஊழியரிடம் பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த்னர்.
கைது
கைது
Published on

பல்லடம்:

பல்லடம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது 35). ஓட்டல் காசாளர். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வடுகபாளையம் இட்டேரி வீதியில் நடந்தது வந்தார்.

அப்போது 6 பேர் கும்பல் பாலகுருவை வழிமறித்தனர். கத்தி மற்றும் உருட்டுக்கட்டைய காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை பறித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 6 பேர் கும்பலை மடக்கிப் பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்த மதன் என்ற முகமது‌ஷபி (24), திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த சாபுதீன்(26), பல்லடம் செந்தோட்டம் சிவராமன் (23), திருப்பூர் பாரப்பாளையம் கார்த்திக் (22), திருப்பூர் காங்கேயம் சாலை நவ்பி (20), திருப்பூர் ராயர்புரம் வெங்கடகிருஷ்ணன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதில் மதன் என்ற முகமது‌ஷபி மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 12 பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் தலை மறைவு குற்றவாளி என்றும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.1450 பணம் மற்றும் கார், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் கோவையில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com