கும்பகோணம் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

கும்பகோணம் அருகே பெண்ணிடம் 6½ பவுன் நகையை மர்ம நபர்கள் 2 பேர் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே மாதுளம் பேட்டை மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வெண்ணிலா (வயது 36) சாக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு காய்கறி வாங்கிவிட்டு மாதுளம்பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் வெண்ணிலா மற்றும் கணேசனை வழிமறித்தனர். அப்போது வெண்ணிலா அணிந்திருந்த 6½ பவுன் தாலிசெயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். 

இதுகுறித்து வெண்ணிலா கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com