மங்கலத்தில் நடந்து சென்ற தனியார் நிறுவன மானேஜரிடம் செல்போன் பறிப்பு

மங்கலத்தில் நடந்து சென்ற தனியார் நிறுவன மானேஜரிடம் மர்ம நபர் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் கோட்டை மேடு காவிரி நகரை சேர்ந்தவர் மணிசேகரன் (வயது 28). தனியார் நிறுவனத்தில் உதவி மானேஜராக வேலை செய்து வருகிறார்.

இவர், நேற்று இரவு வேலை முடிந்து உடன் வேலை பார்க்கும் கண்ணன் என்பவருடன் மங்கலம் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மணிசேகரனிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார்.

இகுகுறித்து மனிசேகரன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com