சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் முந்தைய ஆண்டை விட வருமானம் ரூ.51½ கோடி அதிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் ரூ.156 கோடி தொட்டது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.51½ கோடி அதிகாகும்.
சபரிமலை கோவில்
சபரிமலை கோவில்
Published on

சபரிமலை:

சபரிமலையில் இந்த ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதன் மூலம் கோவிலின் வருமானமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் வருமானம் ரூ.156.60 கோடியை தொட்டது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, ரூ.51½ கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ.105 கோடி வருமானம் கிடைத்து இருந்தது. எனினும் 2017-ம் ஆண்டு வருமானத்துடன் ஒப்பிடும் போது ரூ.7 கோடி குறைவு ஆகும்..

அரவணை விற்பனை மூலம் ரூ.67.76 கோடியும், அப்பம் மூலம் ரூ.9.88 கோடியும், உண்டியல் மூலம் நேற்று முன்தினம் வரை ரூ.53.14 கோடியும் கிடைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com