மரம் வளர்ப்பின் மூலம் பசுமை சூழலை உருவாக்குவதே இலக்கு-வனமரபியல் நிறுவன இயக்குனர் பேச்சு

இயற்கை அன்னை, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வரம் கொடுத்திருக்கிறாள். இந்தியாவுக்கு மரங்களையே வரமாக அளித்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் பயிற்சி மற்றும் பண்ணை விளக்க கருத்தரங்கு திருப்பூரில் நடந்தது. இதில் காற்றுத்தடுப்பு குளோன்கள் சார்ந்த வேளாண் காடு வளர்ப்பு திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

அவிநாசி வேளாண் உதவி இயக்குனர் வினோத்குமார் வரவேற்றார். வனமரபியல் நிறுவன தலைமை வனப்பாதுகாவலர்கள் ராஜேஸ் கோபாலன், செந்தில்குமார் பேசினர். வெற்றி அமைப்பு தலைவர்சிவராம் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிக்கண்ணன் பேசியதாவது:-

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் அழிந்து வரும் அபூர்வ வகை மரங்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. கடந்த 1988ல் பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மரக்கன்றுகளை கொண்டு வந்து மரங்கள் வளர்க்கப்பட்டன. குறிப்பாக 19 முறை அறுவடை செய்து வருவாய் ஈட்டும் வகையிலான சவுக்கு மரங்கள் அறிமுகம் செய்து விவசாயிகள் வளர்க்கின்றனர். 

இதேபோல் 11 முறை அறுவடை செய்யும் தைலம் மரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அழிந்து வரும் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பின் மூலம் பசுமை சூழலை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்றார்.

வேளாண்காடு வளர்ப்பு குறித்து புவனேஸ்வரன் பேசியதாவது:-

இயற்கை அன்னை, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வரம் கொடுத்திருக்கிறாள். இந்தியாவுக்கு மரங்களையே வரமாக அளித்துள்ளார். இந்தியாவின் அனைத்து வகையான தேவைக்குமான மரங்கள் உள்ளன. இவ்வசதி வேறு எந்த நாடுகளிலும் இல்லை.காற்று தடுப்பான் மரங்கள், புதிதாக கண்டுபிடித்த விஷயம் இல்லை. 

பஞ்ச பூதங்களுக்கும் காற்று தடுப்பானுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும். ஆரோக்யமான சூழலாக மாற்றும் சக்தி, காற்று தடுப்பானுக்கு உள்ளது. காற்றுத்தடுப்பான் மரம் வளர்ப்பு மூலம் புயல் காற்றை மட்டுமல்ல, அனைத்துவகையான இயற்கை சீற்றங்களையும் சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com