

சென்னை தியாகராய நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கடந்த 24 மணிநேரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் கட்டடத்தின் கட்டடத்தின் வலிமை குறைந்து இடியத் தொடங்கியது. முதலில் கட்டடத்தின் வலது புறம் இடிந்து விழ, அதைத் தொடர்ந்து கட்டடத்தின் நடுப்பகுதி உட்புறமாக இடிந்து விழுந்தது.
சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் இருக்கும் தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 14 ஊழியர்களை மீட்டனர். தீ மளமளவென பரவி வருவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகைமூட்டமானது. 7 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் முதல் இரு மாடிகளில் தீ கட்டுப்படுத்தப்பட்டும், இரவு 1 மணியளவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது.
முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகே இருக்கும் குடியிறுப்பு வாசிகள் நேற்றே வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தீயை அணைக்க ராட்சத கிரேன்கள், நுரைக்கலவை எந்திரம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது.