வீட்டில் பட்டாசு தயாரித்த முதியவர் கைது

தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தாயில்பட்டி:

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூரில் அனுமதி இல்லாமல் வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது தர்மராஜ் (வயது 60) என்பவர் வீட்டில் 3 பெட்டிகளில் சரவெடிகள், குருவி வெடிகள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெடிகளை பறிமுதல் செய்து தர்மராஜை போலீசார் கைது செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com