தாயில்பட்டி அருகே விபத்தில் மூதாட்டி படுகாயம்

தாயில்பட்டி அருகே விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

தாயில்பட்டி:

தாயில்பட்டி அருகே வெற்றிலையூரணியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் தாயில்பட்டிக்கு வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ மரத்தில் மோதியது. இதில் அய்யம்மாள் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com