தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கியவர் அடையாளம் தெரிந்தது

தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கியவர் அடையாளம் தெரிந்தது.
தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே தூக்கில் பிணமாக தொங்கியவர் அடையாளம் தெரிந்தது
Published on

பா கூர்:

தவளக்குப்பம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் 40 வயது மதிக்தக்க ஆண் ஒருவர் கைலியால் தூக்குபோட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து தூக்கில் பிணமாக தொங்கியவர் யார் எந்த ஊர்? என்பது குறித்தும் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் மடுகரை அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கருணாதீபன் (வயது40) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கருணாதீபனின் மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதால் அன்று முதல் கருணாதீபன் சோகத்துடன் இருந்து வந்ததும், மனைவி இறந்த துக்கத்தில் கருணாதீபன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com