ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் தரங்காவிற்கு இடமில்லை

ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் கேப்டன் உபுல் தரங்காவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் தரங்காவிற்கு இடமில்லை
Published on

இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் இழந்ததால், மேத்யூஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தற்போது 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெறுவது சந்தேக நிலையில் உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான 25 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருநாள் அணி கேப்டன் உபுல் தரங்காவிற்கு இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் போட்டியில் அதிக அளவில் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு டெஸ்ட் போட்டியில் 6 மாதம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தோள்பட்டை காயம் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் வரை அணியில் இடம்பிடிக்காமல் இருந்த தமிகா பிரசாத் அணியில் இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கவுசல் சில்வா அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த சதீரா சமரவிக்ரமாவிற்கு இடம்கிடைத்துள்ளது.


தம்மிகா பிரசாத்

X

Maalai Malar
www.maalaimalar.com