தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோதல் - 8 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி கிராமம் பனஞ்சாரி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுப்பிரமணி (50) தரப்பினருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வேலு நிலத்தை உழுது பயிரிட்ட போது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், பாண்டியன், முத்தம்மாள், சின்னதாய், சின்னசாமி, ஹரிஹரன் உள்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com