எச்.ராஜா மீது கோவை காவல் ஆணையரிடம் புகார் - கைது செய்ய வலியுறுத்தல்

பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹெச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எச்.ராஜா மீது கோவை காவல் ஆணையரிடம் புகார் - கைது செய்ய வலியுறுத்தல்
Published on

கோவை:

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முந்தைய ஆட்சியாளர்கள் வைத்த  லெனின் சிலை இன்று அதிரடியாக அகற்றப்பட்டது.

இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா  பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில்,  ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. வன்முறைக்கும் மோதலுக்கும் வழிவகுக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், பெரியார் சிலை இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவை நீக்கிவிட்டார்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com