தஞ்சையில் டெங்கு காய்ச்சலுக்கு 6-ம் வகுப்பு மாணவி பலி

தஞ்சையில் டெங்கு காய்ச்சலுக்கு 6-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேஹானா பேகம்
ரேஹானா பேகம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவரது மகள் ரேஹானா பேகம் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி ரேஹானா பேகத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிக்கு டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி ரேஹானா பேகம் பரிதாபமாக இறந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com