அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை வசதி- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உறுதி

ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் விரைவில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்துள்ளார்.
அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை வசதி- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உறுதி
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு நாயுடு தெற்கு தெருவில் ரூ. 1 கோடி மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் பேவர் பிளாக் கல் பதிக்க பேரூராட்சி இயக்குனரை வலியுறுத்தியுள்ளேன். விரைவில் அனைத்து வார்டுகளிலும் பணி நடைபெறும்.

மேலும் செட்டியார் பட்டிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சென்னை குறளகத்தில் உள்ள பேரூராட்சி இயக்குநரிடம் வலியுறுத்தி வருகிறேன். விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி பொறியாளர் கலைஞானம், பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒப்பந்தராரர்கள் பால குரு, முத்துராஜ், ஊர் நாட்டாண்மை, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com