ஜெயலலிதாவுக்கு பதில் காந்திமதி சிலையை வைத்து உள்ளனர்: தங்கதமிழ்செல்வன் கிண்டல்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு பதில் காந்திமதி சிலையை வைத்து உள்ளனர் என்று தங்கதமிழ்செல்வன் கிண்டல் அடித்து உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பதில் காந்திமதி சிலையை வைத்து உள்ளனர்: தங்கதமிழ்செல்வன் கிண்டல்
Published on

தேனி:

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரப்பட்டு கடமைக்கு ஜெயலலிதா சிலை என்ற பெயரில் நடிகை காந்திமதி சிலையை திறந்து வைத்து உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்தவுடன் உண்மையான ஜெயலலிதா சிலை வைக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையான 205 டி.எம்.சி. தண்ணீரை 5 வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் தமிழகத்தின் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com