தண்டராம்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தண்டராம்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அடுத்த சு.வாழாவெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீ இவரது மனைவி தீபா (வயது 27). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ராஜீவிற்கு மது குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தீபாவிடம் சண்டை போட்டுள்ளார். சம்பவத்தன்றும் ராஜீ மது குடித்துவிட்டு தீபாவிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த தீபா வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிகொண்டு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீபா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com