தண்டராம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி

தண்டராம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தண்டராம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60) விவசாயி. இவரது மனைவி விருதாம்பாள் (55). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

நிலத்தில் பயிரிடபட்டுள்ள கரும்பிற்கு நீர் பாசனம் செய்வதற்காக தம்பதியினர் நேற்றிரவு நிலத்திற்கு சென்றனர்.

அப்போது நிலத்தில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் அழத்த மின்சார கம்பி விருதாம்பாள் தலை மீது உரசியது இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தார்.

அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தம்பதியினர் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com