ஸ்ரீவைகுண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தாலிச்செயினை பறித்து சென்றனர்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பழைய பாலத்தில் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் உள்ளே வரும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் பழைய பாலத்தின் வழியாக திரும்பிச் செல்கின்றன. இதனால் புதுப்பாலத்தில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாத நிலையே உள்ளது. மேலும் புதுப்பாலத்தில் அதிகாலையிலும், மாலை நேரத்திலும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மற்ற நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத நிலை தான் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த பொன்பாண்டி என்பவரது மனைவி இசக்கிதாய் (வயது 40) புதுப்பாலம் வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இசக்கிதாய் கழுத்தில் கிடந்த 2பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து இசக்கிதாய் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com