டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

தளவாய்புரம் அருகே உள்ள முறம்பு கிராமத்தில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்
Published on

தளவாய்புரம் அருகே உள்ள முறம்பு கிராமத்தில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பகலில் இந்த கடை முன்பு பெண்கள் உள்பட சுமார் 100 பேர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இந்த தகவல் அறிந்ததும் ராஜபாளையம் கூடுதல் போலீஸ் துணைசூப்பிரண்டு மாரிராஜ், தாசில்தார் ரமணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்தக் கடை நேற்று மூடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com