தளவாய்புரம் அருகே மணல் அள்ளியவர் கைது

தளவாய்புரம் அருகே மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தளவாய்புரம்:

தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி ராம தவசி திருமண மண்டபம் அருகில் மணல் அள்ளி வந்த டிராக்டரை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்தனர்.

இதுதொடர்பாக தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் புத்தூரை சேர்ந்த சுடலை என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com