கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தளவாய்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தளவாய்புரம்:

சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் மகன் ஜெயசீலன் (வயது 22) என்பதும், விற்பனைக்காக பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com