தலைவாசல் அருகே பாக்கெட் சாராயம் விற்றவர் கைது

தலைவாசல் அருகே பாக்கெட் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தலைவாசல்:

தலைவாசல் அருகே கருமந்துறை முனியப்பன் கோவில் அருகில் பாக்கெட் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் (வயது 31) என்பவரை ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மடக்கி பிடித்தார். அவரிடமிருந்து 88 லிட்டர் சாராயம், ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை தாலுகா வெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com